2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இரண்டு கிலோகிராம கஞ்சாவுடன் வியாபாரி கைது

George   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்திலிருந்து  2 கிலோகிராம் கஞ்சா பொதியை கொழும்புக்கு கடத்த முயன்ற வியாபாரியை, நேற்று புதன்கிழமை (05), புலனாய்வுப் பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சங்கானைப் பகுதியிலிருந்து, கஞ்சா பொதியொன்று கைமாற்றப்பட்டு, பஸ்ஸில் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுவதாகக் கிடைத்த தவலையடுத்து, முலவை சந்திப்பகுதியில் பஸ்ஸை மறித்துச் சோதனை செய்த பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி கஞ்சா பொதியை கொழும்பிலுள்ள தனது நண்பருக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றதாகக் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X