Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் மீது, ஞாயிற்றுக்கிழமை (07) இரவு கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாலை முகாமையாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து புன்னாலைக் கட்டுவன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் மீது, இரவு 9 மணிக்கு புன்னாலைக் கட்டுவன் சந்தியில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.
இதன்போது, பஸ் சாரதியான எஸ்.ஜெயசீலன் (வயது 42) காயமடைந்துள்ளார்.
தொடர்ந்து, அதே வழித்தடத்தில் 10 மணிக்குச் சென்ற பஸ் மீது, உரும்பிராய் சந்தியில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பஸ்ஸின் சாரதி பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பில், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago