2025 ஜூலை 19, சனிக்கிழமை

இரணைதீவு கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள்

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி, இரணைதீவு கடற்றொழிலாளர்கள் இரணைதீவில் தங்களை தொழில்புரிய அனுமதிக்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலரிடமும் பூநகரி பிரதேச செயலரிடமும் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்திலும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

1990ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது முழங்காவில் கிராமத்தில் இரணைமாதா நகரில் 250 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இரணைதீவில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள நிலையில் தங்களை முதற்கட்டமாக கடற்றொழிலில் ஈடுபட அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இரணைதீவில் மக்கள் குடியேறவும் கடற்றொழிலில் ஈடுபடவும் அனுமதிக்குமாறு கடந்த காலங்களில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 13ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் இரணைதீவில் மக்கள் மீள்குடியேறுதலும் கடற்றொழில் புரிதலும் தொடர்பான விடயம் முக்கியம் பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X