2024 மே 11, சனிக்கிழமை

இராணுவ கவச அங்கிகள் மீட்பு

Editorial   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் (Flak jacket) மீட்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட பகுதியில்,  காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து , கிணற்றை  இறைத்த போது, கிணற்றுக்குள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததை அடுத்து இராணுவத்தினர் , தாம் அதனை அப்புறப்படுத்துவதாக கூறியுள்ளனர். 

மீட்கப்பட்ட பெருமளவு இராணுவ அங்கிகள், அவரது காணிக்குள்    குவிக்கப்பட்டுள்ளன.  

இவை யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக அணிந்து கொள்ளும் ஒருவகை கவச அங்கி என்பது குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .