Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
குருநகரை சேர்ந்த லியோரி பாஸ்கரன் (வயது 55) மற்றும் எல்டின் ராஜ் பிரபு (வயது 27) ஆகிய இரு மீனவர்களுமே காணாமல் போயுள்ளனர்.
குறித்த இரு மீனவர்களும் கடந்த திங்கட்கிழமை (18) யாழ்.குருநகர் இறங்கு துறையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நெடுந்தீவுக்கு மேற்கே மீன்பிடியில் ஈடுபட்டு இருந்த போது படகின் இயந்திரம் பழுதடைந்து விட்டதாக சக மீனவர்களுக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளனர்.
அதனை அடுத்து குறித்த இரு மீனவர்களும் குறிப்பிட்ட இடத்திற்கு சக மீனவர்கள் சென்ற போது அவர்களின் படகினை அங்கு காணவில்லை. அதனை அடுத்து சக மீனவர்கள் கடற்படையினருக்கு அது தொடர்பில் அறிவித்ததுடன், தாமும் காணாமல் போன மீனவர்களை தேடி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .