2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரும்பு கம்பிகளை இறக்கிய இளைஞன் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனத்தில் இருந்து இரும்பு கம்பிகளை இறக்க முற்பட்ட போது, அதனுள் அகப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.கோண்டாவில் மேற்கை சேர்ந்த தேவராசா சரூஜன் (வயது 21) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

உடுவில் பகுதியில் உள்ள இரும்பகம் ஒன்றுக்கு வாகனத்தில் வந்த இருப்பு கம்பிகளை இறக்க முற்பட்ட போது, வாகனத்தில் இருந்து திடீரென கம்பிகள் சரிந்து விழுந்த போதே குறித்த இளைஞர் அதனுள் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக,  சுன்னாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X