2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

இருவேறு இடங்களில் வாள்வெட்டு

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் ,டி.விஜிதா

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் நேற்று (15) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் பகுதி மற்றும் யாழ்ப்பாணம் பூநாரி மடம் பகுதி ஆகிய இடங்களிலேயே இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது 49) மற்றும் நாகமணி ஜெனிஸ்ரன் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவங்கள் தொடர்பாக, மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .