2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை மீனவர்களின் வலைகள் அறுத்தெடுப்பு

George   / 2017 பெப்ரவரி 19 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வடமராட்சி கிழக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய றோலர் படகுகள், கட்டைக்காடு, ஆழியவளை பகுதி மீனவர்களின் வலைகளை அறுத்தெடுத்துச் சென்றுள்ளதாக கட்டைக்காடு மீனவ சங்கத்தினரால், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் கடற்பரப்பில் போடப்பட்டிருந்த வலைகளே இவ்வாறு அறுத்தெடுத்து செல்லப்பட்டுள்ளதாக  கட்டடைக்காடு மீனவ சங்க தலைவர் தெரிவித்தார்.

வலைகள் அறுத்தெடுத்துச் செல்லப்பட்டுள்ளதால், மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமல்  பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரமும் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய றோலர் படகுகளினால் மீனவர்களின் வலைகள் திருடப்பட்டதாக அவர் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X