2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இலஞ்சம், ஊழலை ஒழிக்க புதிய செயற்றிட்டம்

George   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் அரச நிறுவனங்களுக்குச் சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் புதிய செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் டயஸ் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் கபே அமைப்பு ஆகியன இணைந்து இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றது. 

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,'எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் மாற்றங்களை உருவாக்கி வருகின்றோம். இலஞ்சம் மற்றும் ஊழலை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்காக நாம் செயற்பட்டு வருகின்;றோம். உயர்மட்டத்திலுள்ள இவ்வாறான விடயங்களை கையாள புதிய குழுவொன்று உருவாக்கியுள்ளோம். பொதுமக்கள் எங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு தந்தால் எங்களால் வெற்றிகரமாக செயற்படமுடியும்.

அரசாங் ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றனர். ஆதலால், மக்களுக்காக அவர்கள் கடமையாற்ற வேண்டியவர்கள். அவர்களிடமிருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள மக்களுக்கு உரிமையுண்டு. அதற்காக இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் கேட்டால் அது தொடர்பில் 1954 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .