2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இலவச வழிகாட்டல் வகுப்புகள்

Kogilavani   / 2017 ஜூன் 28 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

அரச திணைக்களப் பதவிகளுக்கென்ற போட்டிப் பரீட்சைகளுக்கான இலவச வழிகாட்டல் வகுப்புக்கள், முல்லைத்தீவு மாவட்டச் சமூக சேவைகள் அலுவலகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு, உடையார்கட்டு - வள்ளிபுனத்திலுள்ள இனிய வாழ்வு இல்ல மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இவ்வகுப்புக்கள் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது உளச்சார்பு, நுண்ணறிவு, பொது அறிவு, மொழித்திறன் ஆகிய பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள் வழங்கப்பட்டு, வழிகாட்டல் வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன.

அரச பொது முகாமைத்துவச் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர், நூலக அபிவிருத்தி உதவியாளர், தேசிய மொழிகள் திணைக்கள உத்தியோகத்தர் போன்ற பரீட்சைகளுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் இதில் கலந்து கொள்ள முடியும். மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ள, 021 - 2290392 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X