2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இளைஞனின் கழுத்தை பதம் பாரத்த சில்லு

Yuganthini   / 2017 ஜூன் 29 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சாவகச்சேரி பகுதியில் திருத்த வேலையில் ஈடுபட்டிந்த இளைஞனின் கழுத்தின் மீது டிப்பர் வண்டியின் சில்லு ஏறியுள்ளது.

இச்சம்பவம், இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.

யாழ். – சாவகச்சேரி - கச்சாய் வீதியைச் சேர்ந்த, வடிவேலு சுமன் (வயது 28)  என்ற இளைஞரே இவ்வனர்தத்தில் சிக்குண்டுள்ளார்.

டிப்பர் வாகனத்தில் திருத்த வேலையில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தின்போதே, வாகனம் தானாக உருண்டு இளைஞரின் கழுத்தில் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் படுகாயங்களுக்குள்ளான இளைஞன், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X