2025 மே 16, வெள்ளிக்கிழமை

இளைஞர்களுக்கு இடையே மோதல்: ஒருவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.தயா

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் திருவிழாவில்  இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், இளைஞன் ஒருவர், பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் திருவிழாவின் போது, சுவாமி திருசொருபத்தைத் தூக்குவது தொடர்பில், இரண்டு தரப்புகளுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதில் துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பருத்தித்துறை பொலிஸார், நேற்று (09) இரவு, கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .