2025 ஜூலை 19, சனிக்கிழமை

இவ்வருடம் 500 இந்திய மீனவர்களை கைதுசெய்ய உத்தரவு

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்து படகுகளை கைப்பற்றி சட்டத்துக்கு முன் நிறுத்துமாறு கடலோரக்காவற்படை, மற்றும் நீரியல் வளத்துறையினருக்கு மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அலுவலகத்தில் மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

ஜனாதிபதியுடன் கடந்த வாரம் பேசியிருந்த போது, இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் சான்றுப்பொருட்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

கடலோர காவல்படையினரால் மீனவர்கள் கைதுசெய்யப்படும் பொழுது, அவர்களது படகுகளும் தடுத்து வைக்கப்படுகின்றன. மீனவர்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவுக்கு அமைய விடுவிக்கப்பட்டாலும் அவர்களது பொருட்கள் மீளவும் கையளிக்கப்படமாட்டாது.

கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையாளர் வேறு. கைதான மீனவர்களுக்கு படகுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்.

இவர்கள், ஒரு முதலாளியின் கீழ் மீன்பிடிக்கும் சாதாரண தொழிலாளர்கள்.

தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கும் கடற்படை உயர் அதிகாரிகளுக்கு, கட்டளை வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் குறைந்தது 500 இந்திய மீனவர்களை என்றாலும் கைதுசெய்யவேண்டும். கட்டளைகள் இறுக்கமாக இருந்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினை கட்டுப்படுத்த முடியும். நாம் அயல் நாட்டுடன் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதேபோல் எங்கள் கடல் வளத்தினையும் நாம் இழக்க விரும்பவில்லை என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X