Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவரை உடைந்த போத்தல் துண்டுகளால் குத்திக் காயம் ஏற்படுத்திய நபரை, இன்று வியாழக்கிழமை (21) கைதுசெய்துள்ளதாக இளவாலை குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 17ஆம் திகதி இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட சிறு பிரச்சினை போத்தல் குத்தில் முடிவடைந்தது.
இந்த மோதலில், ஈஸ்வரன் ரகு (வயது 27) என்ற இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்த இளவாலைப் பொலிஸார், பண்டத்தரிப்பு கலட்டிப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.
விசாரணையின் பின் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
29 minute ago
6 hours ago
7 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
6 hours ago
7 hours ago
30 Sep 2025