2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உடுவில் மாணவிகளின் போராட்டத்தின் போது பொலிஸாரின் செயற்பாடு குறித்து விளக்கம் வேணடும்

George   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது, சுன்னாகம் பொலிஸாரின் அசமந்தப் போக்கு மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள்  என்பன தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தினால், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

3 ஆம் திகதி முதல் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள், பாடசாலை நிர்வாகத்துக்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பாடசாலை வளாகத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வந்த பொலிஸ் உத்தியோகத்தர், போராடத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அலைபேசியில் புகைப்படம்  எடுத்தனர்.

அத்துடன், இரவு நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பாதுகாப்புக்குக்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பிவைக்கப்படவில்லை.

இதேவேளை, மாணவிகள்  மீது, ஆசிரியர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக செய்யப்பட்ட முறைப்பாடுகளை கடமையிலிருந்த சுன்னாகம் பொலிஸார்  ஏற்றுக்கொள்ளாததுடன் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவிகளாலும் பெற்றோராலும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பலேயே யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X