2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உடமைகளை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பொதுமக்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பது தொடர்பில் அக்கறையுடன் செயற்படுமாறு மானிப்பாய் பொலிஸார், பிரதேச மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அண்மைக்காலமாக, மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் முன்னால், நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிளகள்; திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது தொடர்பில், பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி ஊடாக அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையை மானிப்பாய் பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மழைகாலம் ஆரம்பித்துள்ளமையால், அதனை திருடர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி, வீடு உடைத்து திருடுதல், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்தவாரம் மானிப்பாய் பகுதியில் திருடப்பட்டமோட்டார் சைக்கிள், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தது. அதேபோல,; கோப்பாய் பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள், கந்தரோடை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே 'உங்கள் உடமைகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள். சொத்துகள்,  உடமைகளின் பாதுகாப்பு உங்கள் கைகளிலே உள்ளது.இரவுநேரங்களில் மோட்டார் சைக்கிள்;, சைக்கிளை வெளியில் நிறுத்துவதனை தவிர்த்து கொள்ளுங்கள். சிரமம் பாராது வீட்டின் உள்ளே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும், இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியில் மின்குமிழ்களை ஒளிர விடுங்கள்' என ஒலிபெருக்கியில் ஊடாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X