2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உடல் நலத்தை மேம்படுத்த தேசிய வாரம்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 19 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலன்புரி அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் விளையாட்டு மற்றும் உடல் நலத்தை மேம்படுத்துவதற்கான தேசிய வாரம், எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையில் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள்திணைக்களப் பணிப்பாளர் பிரதீப் யசரத்தின தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் மாவட்;;டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறி;ப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த வாரத்தில் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பிரதேச செயலக பிரிவு சமூக சேவைகள் அலுவலர், விளையாட்டு அலுவலர் ஆகியோரின் உதவிகள் பெறப்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான சுய உதவிக் குழுக்கள், முதியோர் சங்க அங்கத்தவர்களைக் கொண்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் உதவி பெறப்பட்டு நாடெங்கும் அதிகரித்து வரும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அன்றாடம் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய உடல்நலம் சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டுதல், நோய் நொடியற்ற வாழ்க்கையை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான உணவுப் பழக்கங்கள், தொற்றாத நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிரதேச மட்டங்களில் விளையாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை செய்தல் போன்றவை இந்த வாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அந்தச் சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X