2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உண்ணாவிரத போராட்டம் நிறைவு

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியாவில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருளாதார மையத்தினை, தாண்டிக்களத்தில் அமைக்கக் கோரி, வவுனியா மாவட்ட உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம், முதல் நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது.

வட மாகாண சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியும் அதன் பிரகாரம், தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மையம் அமையவேண்டும் எனவும் கோரி, வவுனியா மாவட்ட உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினால், நேற்று திங்கட்கிழமை (27), உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், அவ்விடத்தில் இருந்தவாறே வட மாகாண முதலமைச்சருடன் தொலைபேசி மூலமாக தொடர்பினை ஏற்படுத்தி, இப்போராட்டத்துக்கு ஏதுவான பதிலை வழங்குமாறு கோரியிருந்தார்.

இதனையடுத்து, எதிர்வரும் வியாழக்கிழமையன்று, வடமாகாண முதலமைச்சர் வவுனியாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு குறித்த சங்கத்தினரையும் வர்த்தக சங்கதினரையும் அழைத்து கலந்துரையாட எண்ணியுள்ளதால், அதுவரை போராட்டத்தை நிறுத்துமாறு மஸ்தான் எம்.பி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, போராட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X