Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 22 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.குகன்
உணவகங்கள், உணவு விடுதிகள் என்பவற்றில் உள்ள கழிவுப்பொருட்களை, யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதாரத் தொழிலாளர்களிடம் தரம் பிரித்து வழங்குமாறு, யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வணிகர்களுக்கு அறிவித்துள்ளது.
இது குறித்து, யாழ்ப்பாணம் வணிகர் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தரம் பிரிக்காது வைக்கப்படும் உணவுக் கழிவுகள் பொலித்தீன்கள், லன்ஞ்சீற்றுகள் என்பன சுகாதாரத் தொழிலாளர்களால் அகற்றப்படமாட்டாது. கழிவுகள் அகற்றப்படாதுவிடின், தங்கள் உணவகங்கள் உணவு விடுதிகளில் கழிவுகள் தேங்கி சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டு தங்கள் வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்படும்.
“இத்தகைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்து சிரமங்களை தவிர்த்துக்கொள்வதற்கு கழிவுகளை தரம் பிரித்து உரிய முறையில் வழங்க வர்த்தகர்களை அறிவுறுத்தும் படி, வணிகர் கழகத்துக்கு யாழ். மாநாகரசபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.
“எனவே, இதனை வர்த்தகர்கள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
29 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago