2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உணவகத்தின் உரிமையாளருக்கு இரண்டாவது தடவையாக அதிகூடிய அபராதம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அரசரட்ணம்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்தின் உரிமையாளருக்கு இரண்டாவது தடவையாக 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஏ.எம்.எம்.றியால் திங்கட்கிழமை (15) தீர்ப்பளித்தார்.

ஊர்காவற்துறை பிரதேசத்தில் புளியங்கூடல் பகுதியிலுள்ள ஒரு உணவகத்துக்குச் சென்ற சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்ஜீவன் சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில் உணவகம் இயங்கி வருவதை அவதானித்தமையை அடுத்து உணவக உரிமையாளருக்கு எதிராக கடந்த 11ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,  உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக் கொண்டமையைத் தொடர்ந்து இவரைக் கடுமையாக எச்சரிக்கை செய்த நீதவான், இவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஆறு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 7 ஆயிரம் ரூபா வீதம் 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

இதே வேளை கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி உணவகத்தில் காணப்பட்ட சுகாதார சீர்கேடு காரணமாக இவருக்கெதிராக சுகாதாரப் பரிசோதகரால் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக் கொண்டமையைத் தொடர்ந்து இவருக்கு நீதிவான் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X