2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உணவகம் அடித்துடைப்பு; உரிமையாளர் மீது வாள் வெட்டு முயற்சி

Princiya Dixci   / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

பலாலி வீதி, கோண்டாவில் சந்தியிலுள்ள உணவகம் ஒன்றின் மீது இனந்தெரியாத கும்பலொன்று, திங்கட்கிழமை (31) இரவு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

முகத்தைத் துணியால் கட்டியபடி மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று, உணவக உரிமையாளரை வாளால் வெட்ட முனைந்த போது, அங்கிருந்த கட்டையால் வாள் வெட்டைத் தடுத்த உரிமையாளர்கள், அதன் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனையடுத்து, கடையின் கண்ணாடி அலுமாரி, கதவுகள் என்பவற்றை வாளால் வெட்டியும், அடித்து உடைத்தும் அந்தக் கும்பல் சேதம் விளைவித்தது.

அதன் பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X