Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
அநுராதபுரம் சிறைச்சாலையில் ஒன்பது நாள்களையும் தாண்டி உண்ணாவிரதம் இருந்துவருகின்ற அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள அடயாள உண்ணாவிரதப் போரட்டத்துகு, ஆதரவு வழங்குவதாக, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வருடக்கணக்காக முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த அரசியல் கைதிகளின் உயிர்களைக் காக்க வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகியோம்.
“அந்தவகையில், குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 minute ago
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
36 minute ago