Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.நேசமணி
யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் புலமைப்பரிசில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள யாழ். மாவட்ட உதவி ஆணையாளர் இ.நிஷாந்தன் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர் முழுநேர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவராக, பெற்றோரில் ஒருவர் யாழ். மாவட்டத்திலுள்ள ஏதாவது கமக்காரர் அமைப்பில் உறுப்பினராகவுள்ள பிள்ளைகள் இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பிள்ளைகள், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிச் சித்தியடைந்து 2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவராக இருக்கவேண்டும்.
மேற்கூறிய தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் தமது எல்லைக்குட்பட்ட கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூரணப்படுத்தி எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் உரிய கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க முடியும்.
இந்த விண்ணப்பப் படிவத்தில் தத்தமது கமக்காரர் அமைப்பினர் சிபாரிசு செய்யவேண்டும் என்பதுடன் பாடசாலை அதிபர், கிராமஅலுவலர் ஆகியோரின் உறுதிப்படுத்தல் கடிதங்களும் அவசியமானதாகும்.
இந்த புலமைப்பரிசிலுக்கு வறுமை, குடும்ப நிலை, பிள்ளையின் கல்வித் தரம், மீள்குடியமர்வு என்பன கருத்தில் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
29 minute ago
6 hours ago
7 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
6 hours ago
7 hours ago
30 Sep 2025