2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உருக்குலைந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

Niroshini   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

சங்குசுட்டிச் சந்தியிலுள்ள பற்றைக்காடு ஒன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில், வயோதிபரின்  சடலமொன்று செவ்வாய்க்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.எல்.டி.எஸ்.பிரியந்த தெரிவித்தார்.

இளவாலை பகுதியைச் சேர்ந்த கனகசபை பொன்னம்பலம் (வயது 86) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த  வயோதிபர் கடந்த 01ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை(06) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை இளவாலை,மற்றும் தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X