2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 ஜனவரி 27 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டை தன்வசம் வைத்திருந்தார்  என்ற சந்தேகத்தில் பேரில், 27 வயதுடைய இளைஞன் ஒருவர்  மானிப்பாய் ஆலடிச் சந்தியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

உடுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது ஏற்கெனவே 12 திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பிரதேசத்தில் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இளைஞனை கைது செய்துள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X