2025 மே 16, வெள்ளிக்கிழமை

உள்ளூர் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

தீபாவளி, கிறிஸ்மஸ், தைப்பொங்கல், சித்திரைப் புதுவருடப் பிறப்பு போன்ற பண்டிகைக் காலங்களில் தற்காலிகமாக அங்காடி வியாபாரம் செய்வதற்கு யாழ். மாநகரசபையால் பிரத்தியேகமாக ஒதுக்கப்படும் இடங்களில் இடம் தேவைப்படும் உள்ளூர் வர்த்தகர்களிடமிருந்து, யாழ். வணிகர் கழகம் விண்ணப்பங்கள் கோரியுள்ளது.

இது தொடர்பாக தங்கள் பதிவுகளை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும்.

தபால் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர், யாழ். வணிகர் கழகம், இல-165, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு, ஒக்டோபர் 20ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க முடியுமெனவும், யாழ்.வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .