2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஊடகவியலாளரிடம் விசாரணை: சபையில் கண்டனம்

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

தமிழ் ஊடகவியலாளர் தி.சோபிதன்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில், நேற்று நடைபெற்றது. இந்த அமர்வில் சபையின் உப தவிசாளர் ஜெயகரன் குறித்த கண்டனத்தை சபைக்கு கொண்டு வந்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில்,

“தமிழ் பத்திரிக்கையான வீரகேசரி பத்திரிக்கையின் யாழ்ப்பாண அலுவலக செய்தியாளர் தி.சோபிதன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பொலிஸ் தலமையகத்துக்கு அழைக்கப்பட்டார். நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் குறித்த செய்தியாளர் இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் காலில் படுகாயம் அடைந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார்” என்றார்.

“அவ்வாறான நிலையில் குறித்த விசாரணையை யாழ்ப்பாணத்துக்கு மாற்றி தருமாறு கோரிய போதிலும் திகதியில் மாற்றம் செய்யலாம் விசாரணைக்கு கொழும்புக்கே வரவேண்டும் என மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்துள்ளனர்.

“பொலிஸாரின் இந்த மனிதாபிமான அற்ற செயலை கண்டிப்பதுடன் ஊடகவியலாளர்களை விசாரனைக்கு அழைப்பதன் ஊடாக அவர்களின் சுதந்திரத்தை நசுக்குகின்றனர்.

“கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நசுக்கப்பட்டனரோ அதேபோல தற்போதைய ஆட்சியிலும் ஊடகவியலாளர்கள் விசாரணை என்ற பெயரில் மறைமுகமாக மிரட்டப்படுகின்றனர். அதற்கு தமது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது” என தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X