2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 21 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலையில் வைத்து 2016 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள், மற்றும் தென்னிலங்கை ஊடக அமைப்புக்கள் இணைந்து பங்கெடுக்கவுள்ளன.

ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்க ஊடக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X