Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 14 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பாரிய எதிர்ப்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபை, ஊழலின்றி மக்களுக்களுக்காகச் செயற்பட வேண்டும்” என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் வவுனியா அலுவலகத்தில், நேற்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
“வடக்கு மாகாணசபை என்பது, மிக நீண்ட காலத்துக்குப் பின்னர், எமது மக்களின் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டதாகும். ஆனால், அங்கு தற்போது என்ன நடக்கிறதென்றே விளங்காதுள்ளது.
“வடக்கு மாகாண சபையில் ஊழல்கள் காணப்படுமாக இருந்தால், மக்களின் தெரிவு தவறாகிப்போய்விடும். அதனால், மக்களின் தெரிவில் தவறில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், அதன் செயற்பாடுகள் அமைய வேண்டும். மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் மாகாண சபையாக அது தொழிற்பட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
“யுத்தத்துக்கு பின்னரான வடமாகாணத்தில், மீண்டும் கல்விநிலை வளர்ச்சிகண்டு வருகின்றது. எனவே, அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலான செயற்பாடுகளை, வடமாகாண சபை முன்னெடுக்க வெண்டும்.
“கடந்த ஆட்சியில் ஊழல் அதிகமாக காணப்பட்டதால் தான், சிறுபான்மையினர் ஊடாக, இந்தப் புதிய ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், சிறுபான்மையினர் பெரும்பான்மையாகக் காணப்படும் வடக்கு மாகாண சபையில் ஊழல் என்றால் என்ன செய்வதென்று, வடமாகாண மக்களே முடிவெடுக்க வேண்டும்” என, அவர் மேலும் கூறினார்.
9 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
3 hours ago