2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

எதிர்க்கட்சி தலைவராக தொடர்ந்தும் சி.தவராசா

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக சி.தவராசாவே நீடிப்பார் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற சபை அமர்வின்போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து சி.தவராசாவை நீக்கி விட்டு அப்பதவியை வை.தவநாதனுக்கு வழங்குமாறு ஈ.பி.டி.பியின் செயலர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தார்.

வடமாகாண சபை தேர்தலின்போது ஈ.பி.டி.பி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டமையால் இக்கோரிக்கையை டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரிடமும் வடமாகாண ஆளுநரிடமும் விடுத்திருந்தார்.

இதனையடுத்து வடமாகாண ஆளுநர் றெஜினோல் கூரே வடமாகாண அவைத்தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வின் போது,

வடமாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் மாற்றம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த 12ஆம் (12.11.2016) திகதி கடிதம் ஒன்றை எனக்கு அனுப்பினார். அக்கடிதம் முறையற்ற விதத்தில் அமைந்தமையால் அது தொடர்பில் நான் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

அதனையடுத்து நேற்றையதினம் (புதன்கிழமை 23.11.2016)  முறையான கடிதம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அக்கடிதம் தொடர்பில் இன்று நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அடுத்த அமர்வில் எனது இறுதி முடிவை தெரிவிக்கின்றேன் என சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று இடம்பெற்ற சபை அமர்வின் போது,

உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக சி.தவராசாவே நீடிப்பார் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X