2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’எத்தகைய தீர்ப்பும் மகிழ்ச்சியை தரும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“எத்தகைய தீர்ப்பு வரினும், அது தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என, முன்னாள் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் நேற்று (06) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கடந்த 30ஆம் திகதி வடமாகாண முதலமைச்சரின் சட்டமுரணான செயற்பாடுகளைத் தெளிவுபடுத்தி வழக்கு ஒன்று என்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்களை இவ்வழக்கினூடாக பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

“இவ்வழக்கு விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது,  இரண்டு விடயங்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ஒன்று வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அவ்வாறான சட்டமீறல்கள் நடைபெற்றிருக்கும் என்று  மேன்முறையீட்டு நீதிமன்றம் திருப்திப்படுமாயின், உடனடியாகவே தடை உத்தரவு பிறப்பிப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.

“அடுத்தது, அவ்வாறு இல்லையெனில் இரண்டு வாரங்களுக்குள் முதலமைச்சரும் ஏனைய பிரதி மனுதாரர்களும் தங்களது பதில்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்படும். அவ்வாறு அவர்களின் பதில்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், நீதிமன்றமானது உரிய விசாரணைகளை மேற்கொண்டு இறுதியான தீர்ப்புக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் காணப்படும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .