Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2021 ஜூன் 06 , பி.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
கள்ளியங்காடு, விளையாட்டரங்கு வீதி பகுதியில் எத்தனோலை, மதுபானமாக்கி விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த முற்றுகை இடம்பெற்றது.
தற்போது பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகள் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கல்வியங்காடு பகுதியில் எத்தனோலினை பாவித்து மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ள.
அதனடிப்படையில், அங்கு சென்றபோது, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து சட்டவிரோத மதுபானமும் 50 லீற்றர் எத்தனோலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago