Editorial / 2024 மார்ச் 13 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
எனது கணவரின் சாவிற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என உயிரிழந்த இளைஞனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
காரைநகர் பகுதிக்கு கணவன் மனைவி சென்று விட்டு திரும்பும் வழியில் , கணவன் மனைவியை கடத்தி சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்துள்ளது.
இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில் ,
காரைநகருக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பும் வேளையில் , பொன்னாலை பாலத்திற்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் எம்மை கடத்த முயற்சித்தனர்.
அவ்வேளை , நானும் கணவரும் அவர்களிடம் தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமிற்குள் தஞ்சம் புகுந்தோம். கடற்படையினர் எம்மை அங்கிருந்து விரட்டினார்கள்.
" எங்களை கடத்த போறாங்க , எங்களை காப்பாற்றுங்க " என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால், அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள்
அவ்வேளையிலே எம்மை அவர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனர்.
கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு , எமக்கு அடைக்கலம் கொடுத்து இருந்தால் , எனது கணவரின் உயிர் பிரிந்திருக்கது. எனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார்.
அதேவேளை , கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காது இருந்தாலும் , தமது முகாமிற்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்தி விட்டு , இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருக்கலாம். கடற்படையின் கண் முன் இருவரை வாகனத்தில் வந்தவர்கள் கடத்தி சென்ற போதும் கடற்படையினர் அதனை தடுக்கவோ , கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்காமை இருந்தமை கடற்படை மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago