Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
மற்றவர்களுக்குத் தீமையளிக்கக் கூட நினைக்காத எமது சமூகம் இன்று தீமையை நோக்கி செல்வதைப் பார்க்கும் போது, தனக்கு மிகுந்த மனக்கவலையாக இருப்பதாக, வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.
யாழில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “ஊடகங்களுடன் இணைந்து செயற்படவே விரும்புகின்றேன். வடமாகாண மக்களுக்கான சேவைகளை என்னால் மாத்திரம் தனியே முன்னெடுக்க முடியவில்லை. எல்லோருடைய ஒத்துழைப்புடன் முன்னெடுக்கவே விரும்புகின்றேன்” என்றார்.
“ஒரு விடயத்தை செய்யும் போது, அதன் சாதக, பாதக விடயங்களை கலந்தாலோசித்து ஒரே பாதையில் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்போம்.
“மக்களுக்குக் கிடைக்க வேண்டியதை பெற்றுக்கொடுக்க வேண்டும். எனது குறுகிய காலத்துக்குள் மக்களுக்கான சேவைகளைத் துரித கதியில் முன்னெடுப்பேன். அரசியல் என்பது எனக்கு அப்பாற்பட்டது. எனக்கு ஆக்கபூர்வமான செயற்றிட்டதை முன்னெடுப்பதே என நோக்கம்.
“யாழ்பாணம் மக்களுக்கு கலாசாரம் சொல்லிக்கொடுக்க தேவையில்லை. ஆனால், இன்று இந்த நிலைமை இங்கில்லை என்றே தோன்றுகின்றது.
தேச வழமை சட்டத்தின் கீழ் மற்றவர்களுக்கு தீங்கில்லாமல் வாழ்ந்தவர்கள் இன்று தீமையை நோக்கி செல்கின்றது. இதனை தடுத்து நிறுத்துவதே எனது நோக்கம். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” எனவும், ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
1 hours ago