2025 ஜூலை 10, வியாழக்கிழமை

எம்.ஜி.ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த தமிழக முதல்வர்களான டொக்டர் எம்.ஜி.ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்,  அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவர் அமரர் பொன் மதிமுகராஜாவின் 20 ஆம் ஆண்டு நாள், சுனாமியின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து முப்பெரும் பெருவிழா யாழில் இடம்பெறுகின்றது.

தாவடியிலுள்ள அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் தலைமை விழா ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற குறித்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (25) காலை கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன்மதிமுகராஜா விஜயகாந்த் தலைமையில் விழாவுக்கான போட்டி நிகழ்வுகள் ஆரம்பமானது.

ஆண்களுக்கான 40 மைல் துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டியை  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கொடியசைத்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை, முப்பெரும் விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (26) தாவடி ஸ்ரீ அம்பலவாண முருகமூர்த்தி ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .