2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நிலையத்தை பயன்படுத்தும் இராணுவம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 04 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தை தொடர்ந்தும், தங்கள் வசம் வைத்து இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

வலிகாமம் வடக்கில் 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த காணியில், 201.3 ஏக்கர் காணிகள் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதியன்று, இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்கள் காணிகளை அடையாளப்படுத்தல் மற்றும் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று உள்ளது. மக்கள் 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த பின்னர், அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை, இராணுவத்தினர் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது, அப்பகுதி காணி விடுவிக்கப்பட்ட போதும், இராணுவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையத்தை சங்கத்திடம் கையளிக்காமல் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சுற்றி வேலிகளையும் இராணுவத்தினர் புதிதாக அமைத்துள்ளனர்.
 
மக்கள் மீள்குடியேறும் போது, மேற்படி எரிபொருள் நிலையம் மக்களிடம் கையளிக்கப்படாவிட்டால், எரிபொருளைப் பெறுவதற்கு இப்பகுதி மக்கள் மல்லாகம் சந்தி வரைக்குச் செல்ல வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X