2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துங்கள்

Niroshini   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் அனைத்தும் உடன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என வட மாகாண போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்  பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் nஷயிட் ராட் அல் ஹூஸைன், ஞாயிற்றுக்கிழமை (07) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோதே  மாகாண அமைச்சர்  பா.டெனிஸ்வரன் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று உலக நாடுகள் பலவற்றில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் அனைத்தும் உடன் கட்டுப்படுத்தப்பட வேண்டும், இல்லையேல் இவை மீண்டும் ஓர் உலகப் போருக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மனித உரிமைகள் உலகில் பாதுகாக்கப்படவேண்டும் என்றால், ஒவ்வொரு நாட்டிலும் சட்டவாட்சி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அத்தோடு மனித உரிமைகள் பட்டயம் மற்றும் அதற்கான பின்னேடுகள்  வலுவாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன்,

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனித உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாகவும் தாம் தீவிரமாக கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

மேலும், இச் சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால், உலகில் அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டால் மாத்திரமே அது சாத்தியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X