2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஒட்டுசுட்டானில் மக்களின் கருத்தறியும் அமர்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்துக்காக நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் கருத்தறியும் விசேட அமர்வுகள், நாளை வெள்ளிக்கிழமையும் நாளை மறுதினம் சனிக்கிழமையும்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெறவுள்ளன.

புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதுபற்றி மக்களின் கருத்துக்களை அறியும் குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாவே, மக்களின் கருத்தறியும் விசேட அமர்வுகள் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெறவுள்ளன.

இதில் அனைவரும் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X