2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்

George   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

ஒருங்கிணைந்த நல்லிணக்க வழிமுறைகளுக்கான இணையத்தளத்தை அதன் தலைவர் மனோரி முத்தடுக்காம, இன்று வெள்ளிக்கிழமை (12) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து இந்த இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.  

உண்மை அறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள இடம்பெறாது தடுத்தல் ஆகிய 4 நோக்கங்களின் அடிப்படையில் ஜெனீவாவுக்கு சமர்ப்பிப்பதற்காக, பொறுப்புக் கூறல் அறிக்கை தயாரிப்பதற்கான பொறிமுறையாக பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்வதற்காக இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இணையத்தள முகவரி

www.scrm.gov.lk


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X