2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளமாட்டார்

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு இணைத்தலைவர்களில் ஒருவரான வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளமாட்டார் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை(13) காலை 10.00 மணிக்கு பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (14) பிற்பகல் 2.00 மணிக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஹாஜி ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே, வடமாகாண முதலமைச்சர் தான் கூட்டத்துக்கு வருகை தரவில்லையென தமக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான அறிவித்தல் எவையும் எமக்கு தெரியப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X