2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஒரு வருடத்தின் பின்னர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மீள ஆரம்பம்

Sudharshini   / 2016 ஜனவரி 30 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

 இரு கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் கைவிடப்பட்ட யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஒரு வருடத்தின்; பின்னர் இன்று சனிக்கிழமை (30) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கூட்டம் இடைநிறுத்தபட்டது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இணைத்தலைமை நியமனம், இணைதலைமை ஒருங்கிணைப்பு பிரச்சினை என பல இழுபறிகளுக்கு பின்னர் மீண்டும் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

யாழ் மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், பெண்கள் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரை இணைத்தலைமையாகக் கொண்டு இந்த ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பமாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X