2025 மே 08, வியாழக்கிழமை

ஒரே குடும்பத்தில் ஐவருக்குத் தொற்று

Niroshini   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில், நேற்று (23) முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போதே, அவர்களுக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அவர் கூறினார்.

புதிய தொற்றாளர்களில், மல்லாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளடங்குவதாகவும், ஏனையோர் உடுவில், காங்கேசன்துறை, சிறுவிளான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், வைத்தியர் கூறினார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 13ஆவது நாளில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 104ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X