2025 மே 10, சனிக்கிழமை

ஓட்டோக்களைப் பரிசோதனை செய்யும் நடவடிக்கை

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நெல்லியடி நகரத்தில் சேவையில் ஈடுபடும் ஓட்டோக்களைப் பரிசோதனை செய்யும் நடவடிக்கை,  பிரதேச சபையினரால் முன்னெடுக்ப்பட்டது.  

நெல்லியடி நகர பகுதியில் சேவையில் ஈடுபடும் சில ஓட்டோக்கள்,  பராமரிப்பு இன்மை, அதிக புகை, அதிக ஒலி, பொருத்தமற்ற இருக்கைகள், அதிகளவு அதிர்வுடன் கூடிய இயந்திர பாவனை போன்ற பல்வேறு அசௌகரியங்களுடன் சேவையில் ஈடுபடுவதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என  நெல்லியடி பகுதி மக்களால் கரவெட்டி பிரசேத சபையினருக்கு முறைப்பாட்டு செய்யப்பட்டது.

இதையடுத்து  கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையிலான பிரதேசசபை உத்தியோகத்தர்கள், நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள் இணைந்து   சகல ஓட்டோக்களையும் பரிசோதனைக்குட்படுத்தினர். 

நெல்லியடி நகரப்பகுதியில் சேவையில் ஈடுபடும் 30 ஓட்டோக்களில் 12 ஓட்டோக்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, தகுதியான ஓட்டோக்களுக்குத் தகுதிச் சான்றிதல் வழங்கப்பட்டது.

அத்துடன், குறைபாடுள்ள ஓட்டோக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு, மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, எதிர்வரும் 01ஆம் திகதி முதல் பாவனைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X