2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஓரங்கட்டப்பட்ட சர்வேஸ்வரன் மீண்டும் இணைப்பு?

Niroshini   / 2016 ஜனவரி 26 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கான வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டமைந்த விசேட குழுவில், ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் பெயர் முன்னர் குறிப்பிடப்படவில்லை.

சர்வேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவில் உள்ளார் என வெளியாகிய செய்தி காரணமாக அவர் இந்தக் குழுவில் இணைக்கப்படவில்லையா? என்ற கேள்வியை எழுப்பிய ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அவ்வாறு வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென்பதை இன்று செவ்வாய்க்கிழமை (26) கைதடியில் நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் கூறினார்.

எனினும், மேற்படி குழுவில் சர்வேஸ்வரன் சேர்த்துக்கொள்ளப்படுவார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதற்கிணங்க சர்வேஸ்வரனும் 19 ஆவது நபராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X