Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கில், பொதுமக்களின் காணிகளில் உள்ள இராணுவம், அதிலிருந்து வெளியேறுவதற்கு பணம் தர வேண்டும் என நிபந்தனை விதிப்பதானது, ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கும் செயற்பாடாகுமெனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இராணுவத்துக்கு கோட்டையை மட்டுமல்ல ஓர் அங்குல நிலத்தை கூட வழங்கக்கூடாதெனவும் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில், படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் பணம் வழங்க வேண்டுமென்றும் யாழ்ப்பாண கோட்டையை படையினருக்கு தந்தால், மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியுமெனவும் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து இது தொடர்பாக, மேற்படி கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு – கிழக்கில், தமிழ் மக்களின் காணிகளில் உள்ள இராணுவமானது, ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும் என்பதுவே அனைத்து தமிழ் மக்களதும் கோரிக்கையாகவுள்ளதெனவும் இதனையே தமிழ் தலைமைகள் வலியுறுத்தி வருகின்றனவெனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மக்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப, அந்தக் காணிகளில் இருந்து வெளியேற வேண்டியது இராணுவத்தின் கடமையாகுமெனத் தெரிவித்த அவர், இதனை தவிர்த்து தாம் வெளியேற வேண்டுமாக இருந்தால் பணம் தர வேண்டும், அது தர வேண்டும், இது தர வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது, மக்களை அச்சுறுத்தும் செயலாகுமெனவும் குற்றஞ்சாட்டினார்.
எனவே, வடக்கு - கிழக்பகு அபிவிருத்திக்கென ஒதுக்கும் பணத்தை, இராணுவத்துக் வழங்கக்கூடாதெனவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
மேலும், கோட்டை என்பது தொல்லியல் சான்றாகுமெனத் தெரிவித்த அவர், அதனை இராணுவத்துக்கு வழங்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.
கோட்டை மாத்திரமல்ல ஓர் அங்குலம் நிலம் கூட இராணுவத்துக்கு வழங்க முடியாதென, அவர் மேலும் கூறினார்.
15 minute ago
19 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
33 minute ago