2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காடுகளுக்குள் மக்களை எறியாதீர்கள்

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மீள்குடியேற்றம் செய்கின்றோம் என்று காடுகளுக்குள் பொதுமக்களை எறியக்கூடாது. மக்களை மீளக்குடியமர்த்தும் இடங்களில் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திய பின்னர் அவர்களை அந்த இடங்களில் மீளக்குடியமர்த்துங்கள் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், செவ்வாய்க்கிழமை (02) செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

மீளக்குடியேறிய மக்களுக்கு 2 இலட்சம் ரூபாய் செலவில் தற்போது அரை நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. கொஞ்சம் கூடுதலாக நிதி ஒதுக்கி 10 இலட்சம் ரூபாவுக்கு நல்ல வீடுகள் கட்டிக் கொடுக்க முடியும்.

நல்லாட்சி அரசாங்கம் கூறிய 6 மாதத்தில் மீள்குடியேற்றம் என்பதில், 1983ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களை 3 மாத காலத்துக்குள்ளும் 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களை 6 மாத காலத்துக்குள்ளும் மீள்குடியமர்த்த வேண்டும்.

ஒரு பிரதேசத்தில் இடம்பெயரும் போது 1,000 குடும்பங்களாக இருந்தன, தற்போது 2,000 குடும்பங்களாக மாறியுள்ளன. அதற்காக அக் குடும்பங்களுக்கு காணிகள் வழங்க முடியாது, வீடுகள் வழங்க முடியாது என்று கூறமுடியாது. காணி அலுவலகம் அமைத்து அக் குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கி வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது, 'சிவாஜிலிங்கம், வடமாகாண சபையில் கதைக்க வேண்டிய விடயங்களை இங்கு கதைக்கின்றார்' என இணைத்தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X