2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

காட்டிக்கொடுத்தது சி.சி.டி.வி: திருடர்களுக்கு வலைவீச்சு

George   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்

சுதுமலை தெற்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் விறாந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி, திங்கட்கிழமை (18) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டி இவ்வாறு திருட்டுப்போயுள்ளதாக செல்வன் ஸ்ரீதரன் என்பவர் முறைப்பாடு செய்துள்ளார்.

முச்சக்கரவண்டியை இருவர் தள்ளிச் செல்லும் காட்சி, வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது. 

அந்தப் பதிவை வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X