2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கூட்டுறவுக் சங்கங்கள் கூடுதலான உணவுகளை சேகரிக்க வேண்டும்

Gavitha   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் கூடுதலான உணவுப் பொருட்களை சேமிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கு.சுகுணதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மழை காலத்தில் வெள்ளமேற்பட்டு போக்குவரத்துகள் தடைப்படுகின்றபோதும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பொதுவிடங்களில் தங்கவைக்கப்படுகின்ற போதும், போக்குவரத்து துண்டிக்கப்பட்ட கிராமங்களிலுள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கக்கூடிய வகையில் கூட்;டுறவுச் சங்கங்கள் கூடுதலான உணவுப்பொருட்களை சேமித்து வைக்க வேண்டும்.

குறைந்தது 5,000 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை விநியோகிக்கக்கூடிய வகையில் அவை இருக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .