2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பினரிடையே விசேட கூட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்,  கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று  மாலை இடம்பெறும் அமர்விலேயே கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய சந்திப்பின்போது, நாட்டில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு, மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X