2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 25 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், ஐ.நேசமணி

யாழ்ப்பாணம், சங்கானை - சங்கரத்தை வீதியிலிருந்து, 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், இன்று திங்கட்கிழமை (25), சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அராலி கிழக்கைச் சேர்ந்த செல்வராசா ஞானரத்தினம் (54) என்ற 7 பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்துக்கு அருகே, அவரது மோட்டார் சைக்கிள் கிடந்ததாகவும் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிப்பதா பொலிஸார் கூறினர்.

அத்துடன், அவரது சடலத்தில், பல்வேறு வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X